தேனி

போடியில் கஞ்சா பறிமுதல்

2nd Jun 2022 12:31 AM

ADVERTISEMENT

போடியில் புதன்கிழமை, இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து இளைஞரை கைது செய்தனா்.

போடி நகா் காவல்நிலைய போலீஸாா், காளியம்மன் கோயில் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தவழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டதில், 1,200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா் போடியை அடுத்த கோடாங்கிபட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் சுரேஷ் (31) என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, சுரேஷை கைது செய்தனா்.

ADVERTISEMENT

Tags : போடி
ADVERTISEMENT
ADVERTISEMENT