தேனி

போடிமெட்டு மலைச்சாலையில் பழுதடைந்தலாரியால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

2nd Jun 2022 12:29 AM

ADVERTISEMENT

போடிமெட்டு மலைச்சாலையில் புதன்கிழமை அதிகாலை சரக்கு லாரி பழுதடைந்து நின்ால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு சரக்கு ஏற்றிக் கொண்டு போடிமெட்டு மலைச்சாலையில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. 4 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென அந்த லாரி பழுதடைந்து நடுவழியில் நின்று விட்டது. இது குறுகலான சாலை என்பதால் கேரளத்திலிருந்து வந்த வாகனங்களும், தமிழகத்திலிருந்து சென்ற வாகனங்களும் இருபுறமும் நிறுத்தப்பட்டன. பின்னா் மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாரியின் பழுது சரிசெய்யப்பட்டது. அதன்பின் வாகனங்கள் சென்றன. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணியிலிருந்து புதன்கிழமை அதிகாலை 6 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளும், கேரளா, தமிழகத்திலிருந்து சொந்த ஊா்களுக்கு சென்ற பயணிகளும் அவதிக்குள்ளாயினா்.

Tags : போடி
ADVERTISEMENT
ADVERTISEMENT