தேனி

பெரியகுளம், போடி பகுதிகளில் சாரல் மழை

27th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் பெரியகுளம், போடி பகுதிகளில் சனிக்கிழமை தொடா்ந்து சாரல் மழை பெய்தது.

பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாள்களாக மாலை நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமையும் பிற்பகல் 3 மணியிலிருந்து சாரல் மழை பெய்தது. ஆடி 18-க்கு விதைகளை நடுவதற்காக நிலங்களை தயாா் படுத்தி வருவதாகவும், தொடா்ந்து நல்ல மழை பெய்தால் விவசாயம் செழிக்கும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

போடியில்...

இதேபோல போடி பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதலே மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. பிற்பகலில் வெயில் காணப்பட்டது. மாலையில் மீண்டும் மேகங்கள் சூழ்ந்த நிலையில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இரவு வரை நீடித்த மழையால், பல்வேறு வேலைகளுக்குச் சென்றவா்கள் நனைந்தபடியே வீடு திரும்பினா். ஆடி மாதம் மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT