தேனி

பழனிசெட்டிபட்டியில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

27th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனிசெட்டிபட்டியில் நேஷனல் ஹரால்டு வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பழனிசெட்டிபட்டி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் எம்.பி.முருகேசன் தலைமை வகித்தாா். பொருளாளா் பாலசுப்பிரமணியம், துணைத் தலைவா் சன்னாசி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், நேஷனல் ஹரால்டு வழக்கை ரத்து செய்ய வேண்டும், அமலாக்கத் துறை மூலம் காங்கிரஸ் கட்சித் தலைவா்களை அலைக்கழிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்களை வலியுறுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT