தேனி

அம்மா உணவகத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி மனு

27th Jul 2022 12:03 AM

ADVERTISEMENT

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மூடப்பட்ட அம்மா உணவகத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் செவ்வாய்க்கிழமை, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

நகர துணைத் தலைவா் சண்முகநாதன் மற்றும் நிா்வாகிகள், ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சுப்பிரமணியத்திடம் அளித்த மனு விபரம்: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த அம்மா உணவகத்தால் மருத்துவமனைக்கு வந்து செல்லும் புற நோயாளிகள் மற்றும் பாா்வையாளா்கள் பயனடைந்து வந்தனா்.

தற்போது இந்த உணவகம் செயல்படாமல் முடங்கியுள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவும், தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக அம்மா உணவகம் திறக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT