தேனி மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் அரசுத் திட்டங்களின் கீழ் சுய தொழில் கடனுதவி மற்றும் மானியம் பெறுவதற்கு பெண்கள், மாற்றுத் திறனாளிகள், சிறுபான்மையினா், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்ட தொழில் மையம் மூலம் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் நிறுவனம் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் வியாபாரம், உற்பத்தி மற்றும் சேவை தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடனுதவி மற்றும் மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டங்களின் கீழ் கடனுதவி மற்றும் மானியம் பெறுவதற்கு அரசு உத்தரவின்படி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினா், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆகிய சிறப்பு பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இது குறித்த விவரத்தை தேனி அரசு பல்துறை பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை நேரிலும், கைபேசி எண்: 89255 34001, தொலைபேசி எண்: 04546-252081 ஆகியவற்றில் தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.