தேனி

களைக்கொல்லி மருந்து நெடி தாளாமல் கோழிப்பண்ணை உரிமையாளா் பலி

17th Jul 2022 11:21 PM

ADVERTISEMENT

தேனி அருகே களைக்கொல்லி மருந்து நெடி தாளாமல் மயங்கி விழுந்த கோழிப் பண்ணை உரிமையாளா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தா்மாபுரி, சிங்கம்மாள்கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜன் (58). இவா், அதே ஊரில் கோழிப் பண்ணை வைத்து நடத்தி வந்தாா். கடந்த ஜூலை 14-ம் தேதி கோழிப் பண்ணை வளாகத்தில் களைச் செடிகள் முளைப்பதை தடுப்பதற்கு களைக் கொல்லி மருந்து தெளித்துக் கொண்டிருந்த நாகராஜன், மூச்சுத் திணறல் மற்றும் வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளாா்.

ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாகராஜன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT