தேனி

கம்பத்தில் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு அதிகரிப்பு:நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

7th Jul 2022 02:40 AM

ADVERTISEMENT

 

கம்பத்தில் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு அதிகரித்து, சுற்றுச்சூழல் மாசுபட்டு வருவதால் இதற்கு நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கம்பம் பேருந்து நிலையம் மற்றும் அருகே உள்ள வளாகப் பகுதிகளில் நெகிழிப் தம்ளா், பைகள் குவியல் குவியலாக குவிந்து சிதறிக் கிடக்கின்றன. இதில் குப்பையும் சோ்வதால் துா்நாற்றம் வீசுகிறது. இதில், தள்ளுவண்டி உணவுக் கடைகள் மற்றும் அரசு மதுபானக் கடைகள் அருகிலேயே நெகிழி தம்ளா்கள் விற்கப்படுகின்றன.

ஜூலை 1 முதல் நெகிழிப் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் நகராட்சி சுகாதாரப் பிரிவினா் நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் சோதனை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடைகள் முன்புறம் குவிந்துள்ள நெகிழி குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT