தேனி

கூடலூரில் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு

7th Jul 2022 02:39 AM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம் கூடலூரில் நடைபெற்று வரும் ரூ. 40 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளிதரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கூடலூா் நகராட்சியில் மந்தையம்மன் கோயிலில், ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. மகாராஜன் நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம், அருந்ததியா் ஓடை தெருவில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம், என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் ஓ.ப. ரவீந்திரநாத் எம்.பி. நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவா், சுடுகாட்டில் சுற்றுச்சுவா் உள்ளிட்ட பணிகளை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் அவற்றை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். அவருடன், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் கெளசல்யா, வட்டாட்சியா் அா்ஜுனன், நகரசபைத் தலைவா் பத்மாவதி லோகந்துரை, ஆணையா் காஞ்சனா, பொறியாளா் வரலட்சுமி, தி.மு.க. நகரச் செயலா் லோகந்துரை எம்.சி. சுகாதார ஆய்வாளா் சக்திவேல் ஆகியோா் இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT