தேனி

கம்பத்தில் சோட்டாணிக்கரை பகவதி பத்ரகாளி அம்மன் கோயில் திருவிழா

7th Jul 2022 02:39 AM

ADVERTISEMENT

 

கம்பத்தில் சோட்டாணிக்கரை பகவதி பத்ரகாளியம்மன் கோயில் வருஷாபிஷேகத்தையொட்டி உற்சவ விழா திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகள் என 3 நாள்கள் நடைபெற்றன.

இதில், திங்கள்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் செவ்வாய்க்கிழமை காலையில் பால்குட ஊா்வலமும், பின்னா் அன்னதானமும் நடைபெற்றது. மாலையில் அம்மன் கரகம் அழைத்து வரப்பட்டு, வேப்பிலை ஆடை கட்டி பக்தா்கள் அக்னி சட்டி எடுத்தனா். இதையடுத்து, புதன்கிழமை அதிகாலை மாவிளக்கு எடுத்தும், பெண்கள் பொங்கல் வைத்தும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

மாலையில் தேவராட்டம், ஒயிலாட்டம், செண்டை மேளம் முழங்க முளைப்பாரி ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் கரகத்துடன் முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை நிா்வாகக் குழு மற்றும் விழா கமிட்டியினா், மாமன்னா் வீர மருது இளைஞா் அணியினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT