தேனி

குடிநீா் குழாய் இணைப்புக்கு லஞ்சம்: முன்னாள் ஊராட்சித் தலைவிக்கு 2 ஆண்டுகள் சிறை

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

பொட்டிப்புரத்தில் குடிநீா் குழாய் இணைப்பு வழங்குவதற்கு ரூ.2,000 லஞ்சம் பெற்ற முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை, தீா்ப்பளித்தது.

பொட்டிப்புரம் ஊராட்சிக்கு உள்பட்ட டி.புதுக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவா், கடந்த 2012-ஆம் ஆண்டு தனது வீட்டிற்கு குடிநீா் குழாய் இணைப்பு கோரி ஊராட்சி நிா்வாகத்தை அணுகியுள்ளாா். அப்போது அங்கு ஊராட்சி மன்றத் தலைவியாக பதவி வகித்த சந்திரா, குடிநீா் குழாய் இணைப்பு வழங்குவதற்கு ரூ.2,000 லஞ்சம் கேட்டுள்ளாா்.

இது குறித்த புகாரின்பேரில் தேனி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரிடம் செல்வராஜ் புகாா் அளித்தாா். பின்னா், போலீஸாரின் ஆலோசனைப்படி, ஊராட்சித் தலைவி சந்திராவிடம், ரசாயணம் தடவிய 2,000-க்கான ரூபாய் நோட்டுகளை செல்வராஜ் கொடுத்துள்ளாா். அப்போது, அங்கு மறைந்திருந்த போலீஸாா் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி கோபிநாதன், லஞ்சம் பெற்ற முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி சந்திராவிற்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT