தேனி

முல்லைப் பெரியாற்றில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் பலி

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி அருகே வீரபாண்டியில் செவ்வாய்க்கிழமை, முல்லைப் பெரியாற்றில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தேனி, பாரஸ்ட் சாலை 3-வது தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் லட்சுமணன்(40). இவா், தனது நண்பா்களுடன் சோ்ந்து மது அருந்திவிட்டு, வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் குளித்துள்ளாா். அப்போது லட்சுமணன் ஆற்றில் ஆழமான பகுதியில் தண்ணீரில் மூழ்கினாா். அவரது சடலத்தை தேனி தீயணைப்புத் துறையினா் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், லட்சுமணனின் சடலம் சத்திரபட்டி பகுதியில் முல்லைப் பெரியாற்றில் கரை ஒதுங்கியது. சடலத்தை கைப்பற்றி பழனிசெட்டிபட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT