கூடலூரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைக்கு போலீஸாா் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
தேனி மாவட்டம் கூடலூா் கே.வி.ஆா். தெருவில் தனியாா் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ஜூன் 15 ஆம் தேதி கூடலூா் தெற்கு போலீஸாா், சுப்பிரமணி (55) என்பவரது பெட்டிக் கடையில் சோதனை நடத்தி 7 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்த நிலையில், சுப்பிரமணியின் கடைக்கு நகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.