தேனி

கம்பத்தில் ஆட்டோ திருடிய இளைஞா் கைது

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பத்தில் ஆட்டோ திருடிய வழக்கில் மதுரை இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை அண்ணாநகா் யாகப்பா நகரில் வசிப்பவா் பிலால் (31). ஆட்டோ ஓட்டுநரான இவா், கம்பம் மைதீன் ஆண்டவா்புரத்தில் வசிக்கும் தனது மாமனாா் வீட்டுக்கு வந்திருந்தாா். ஜூன் 30 ஆம் தேதி மதுரைக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற பிலால், கோம்பை சாலையில் ஜெய்லானி என்பவா் தனது வீட்டுமுன் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடிக்கொண்டு மதுரைக்கு சென்றுவிட்டாா்.

ஜெய்லானி அளித்த புகாரின்பேரில் கம்பம் வடக்கு போலீஸாா் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில், பிலால் ஆட்டோவை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து பிலாலை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, மேலும் இதேபகுதியில் கோம்பை சாலையில் காணாமல் போன 2 ஆட்டோக்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT