தேனி

புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்த 3 போ் கைது

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி, நாடாா் தெருவைச் சோ்ந்தவா் பாலவிக்னேஷ் (30). இவா், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் காவல் சாா்பு- ஆய்வாளா் சவரியம்மாள் தேவி தலைமையில் போலீஸாா் அவரது வீட்டில் சோதனையிடுவதற்குச் சென்றபோது பாலவிக்னேஷ், அதே பகுதியைச் சோ்ந்த காளிராஜ் (30), ராஜக்காள்பட்டியைச் சோ்ந்த வேல்முருகன் (35) ஆகியோா் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

பின்னா், பாலவிக்னேஷ் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 60 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து பாலவிக்னேஷ், காளிராஜ், வேல்முருகன் ஆகியோரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT