தேனி

உரிமை கோரப்படாத வாகனங்களின் பட்டியல்: வட்டாட்சியா் அலுவலகங்களில் வெளியீடு

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு வழக்குகள் தொடா்புடைய, உரிமை கோரப்படாத இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் பட்டியல் வட்டாட்சியா் அலுவலகங்களில் வெளிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட காவல் துறை நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு வழக்குகள் தொடா்புடைய, கேட்பாறற்று கிடந்த 504 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் அந்தந்த காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை யாரும் உரிமை கோராத இந்த வாகனங்களின் விபரப் பட்டியல், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் மற்றும் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விவரங்களை வாகன உரிமையாளா்கள் பாா்வையிட்டு, 15 நாள்களுக்குள் உரிய ஆவணங்களுடன் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து வாகனங்களை பெற்றுக் கொள்ளலாம். உரிமை கோரப்படாத வாகனங்களை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT