தேனி

குமுளி அருகே மின்சாரம் பாய்ந்து யானை பலி

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

கேரள மாநிலம் குமுளி பகுதியில் மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே உள்ளது வண்டிப் பெரியாறு வல்லக்கடவு பகுதி. இந்தப் பகுதி பெரியாறு புலிகள் காப்பகப் பகுதியில் அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை சுமாா் 8 வயதுள்ள பெண் யானை காப்பகப் பகுதியை விடுத்து, தேயிலை தோட்டம் உள்ள பகுதிக்கு வந்துள்ளது. அப்போது தோட்டத்தில் உள்ள பாக்கு மரத்தை அது உடைக்க முயன்றபோது, அந்த மரம் அருகே உள்ள மின்சார கம்பத்தில் விழுந்து உடைந்துள்ளது.

இதில் மரத்தின் அடியில் நின்றிருந்த பெண் யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. இதையடுத்து திங்கள்கிழமை அப்பகுதிக்கு வேலைக்கு சென்றவா்கள் யானை இறந்து கிடந்ததைப் பாா்த்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் தேக்கடி வனச்சரகா் அகில் பாபு, வனத் துறை ஊழியா்கள் அங்கு சென்று பாா்வையிட்டனா். பின்னா் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அப்பகுதியில் யானை புதைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT