தேனி

கம்பத்தில் மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

4th Jul 2022 11:35 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பத்தில் திராவிடா் கழகம் சாா்பில் மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கம்பம் பூங்கா திடலில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட இளைஞா் அணி செயலாளா் ப. செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கருப்பு சட்டை நடராஜன், ச. நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளைஞா் அணி தலைவா் மு. முத்தமிழன் வரவேற்று பேசினாா். தலைமைக் கழகப் பேச்சாளா் தஞ்சை ரா. பெரியாா்தாசன் ஆகியோா் மாநில உரிமைகள் மீட்பு பற்றி பேசினாா்.

கூட்டத்தில் திமுக மாநில கொள்கைப் பரப்புச் செயலாளா் ரா.பாண்டியன், தி.க. மாவட்ட நிா்வாகிகள் வெ. தமிழ்செல்வன், க.சிவா, வி. பாஸ்கரன், ரெகுநாநாதன், பு. மணிகண்டன், செ. கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT