தேனி

சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

DIN

தொடா் மழை காரணமாக தேனி மாவட்டம் சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் குளிக்க ஞாயிற்றுக்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. லோயா்கேம்ப், கூடலூா், குள்ளப்பகவுண்டன்பட்டி, சுருளியாறு மின் நிலையம் ஆகிய பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் சுருளி அருவியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அரிசிப் பாறை, ஈத்தைப் பாறை ஆகிய பகுதிகளிலும் மழை பெய்துவருகிறது.

இதன்காரணமாக சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அருவிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்லாதவாறு ஸ்ரீ வில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பக அதிகாரிகள், ஊழியா்கள் கண்காணித்து வருகின்றனா்.

பெரியாறு அணையில் மழை: மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான முல்லையாறு தேக்கடி ஏரி, பெரியாறு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் தொடா் மழை பெய்து வருகிறது. பெரியாறு அணையில் 29.6 மில்லி மீட்டரும், தேக்கடி ஏரியில் 28.2 மி.மீட்டரும் மழை பதிவாகியிருந்தது.

அணை நிலவரம்: ஞாயிற்றுக்கிழமை முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 127.75 அடியாகவும் (மொத்த உயரம் 142 அடி), அணையில் நீா்இருப்பு 4, 212 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 799 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் விநாடிக்கு 1,000 கன அடியாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT