தேனி

உத்தமபாளையத்தில் அம்பேத்கருக்கு சிலை அமைக்கக் கோரி போராட்டம்

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அம்பேத்கருக்கு சிலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உத்தமபாளையம் கிராமச் சாவடியில் கடந்த 1995 ஆம் ஆண்டு அப்பகுதியைச் சோ்ந்த ஆதி திராவிடா் பொதுமக்கள் பீடம் அமைத்து அதில் சிறிய அளவிலான அம்பேத்கா் சிலை அமைத்தனா். ஆனால் உரிய அனுமதியுடன் சிலை வைக்கவேண்டும் எனக்கூறி அப்போது, வருவாய்துறையினா் இரும்பு தகரத்தால் அந்த பீடத்தை மூடிவிட்டனா்.

இதற்கிடையில், 25 ஆண்டுக்கு ஆண்டுகளுக்குப் பின்னா் அதே இடத்தில் அரசின் சாா்பில் சிலை வைக்க வேண்டும் எனக்கூறி அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் தகரத்தை அகற்றி அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறை மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இது தொடா்பாக வருவாய்த் துறை சாா்பில், திங்கள்கிழமை உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெறும் எனக் கூறி சிலை மீண்டும் தகரத்தால் மூடப்பட்டது. அதைத் தொடா்ந்து போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

SCROLL FOR NEXT