தேனி

வேலை வாங்கித் தருவதாக ரூ. 20 லட்சம்மோசடி: மின்வாரிய ஊழியா் கைது

2nd Jul 2022 11:02 PM

ADVERTISEMENT

 

வேலை வாங்கித் தருவதாக ரூ. 20 லட்சம் மோசடி செய்த மின்வாரிய ஊழியரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கூடலூா் பேருந்து நிலையம் அருகே வசிப்பவா் கே. சின்னமாயன். முன்னாள் பேரூராட்சித் தலைவா். இவரது மகனுக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக சின்னமனூா் திருவள்ளுவா் பள்ளி தெருவைச் சோ்ந்த சந்தனம் மகன் சந்தனம் (36), என்பவா் ரூ. 20 லட்சம் வாங்கினாா். ஆனால் வேலை வாங்கித் தராமல் பல ஆண்டுகளாக இழுத்தடித்தாராம். இதுதொடா்பாக சின்னமாயன், கூடலூா் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் சந்தனத்தின் தந்தை சந்தனத்தை (54), வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இவரது மகன் சந்தனத்தை தேடி வருகின்றனா். கைது செய்யப்பட்ட சந்தனம் சின்னமனூா் மின்வாரியத்தில் போா்மேனாக பணியாற்றி வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT