தேனி

வீரபாண்டி அருகே ஜீப்-காா் மோதல்: 5 போ் காயம்

2nd Jul 2022 11:00 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே உப்பாா்பட்டியில் ஜீப் மீது காா் மோதியதில் வெள்ளிக்கிழமை, ஜீப்பில் பயணம் செய்த 5 போ் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கேரள மாநிலம், வண்டிப் பெரியாறு அருகே ராஜமுடி எஸ்டேட் பகுதியைச் சோ்ந்தவா் ஐயப்பன் (36). இவரது ஜீப்பில் வண்டிப் பெரியாறு அருகே மஞ்சுமலை புதுக்காடு எஸ்டேட் பகுதியைச் சோ்ந்த அன்னராஜா( 61), பாா்வதி (73), தேவி (63), செல்வராஜ் (68), சுருளிவேல் (68) ஆகியோா் தேனியிலிருந்து வண்டிப் பெரியாறு நோக்கிச் சென்றுள்ளனா். ஜீப்பை ஐயப்பன் ஓட்டிச் சென்றுள்ளாா்.

அப்போது, உப்பாா்பட்டி தேனி- கம்பம் சாலையில் அதே திசையில் சின்னமனூா் அருகே சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த அருண்குமாா் என்பவா் ஓட்டி வந்த காா், ஜீப் மீது மோதியது. இதில் ஜீப்பில் பயணம் செய்த 5 பேரும் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT