தேனி

கம்பத்தில் ஜூலை 10-இல்கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

2nd Jul 2022 11:02 PM

ADVERTISEMENT

 

கம்பம் நேதாஜி அறக்கட்டளை, மியூசிக் ஸ்டாா் சேனல், தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம் சாா்பில் காமராஜா் பிறந்த தினவிழா, 75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி மாணவா்களுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் நேதாஜி அறக்கட்டளை வளாகத்தில் ஜூலை 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், கல்விக் கண் தந்த காமராஜா் என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் பேச்சு போட்டியில் 6 ஆம் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவியா் பங்கேற்கலாம். படிக்காத மேதை காமராஜா் என்ற தலைப்பில் நடைபெறும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் 9 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியா் பங்கேற்கலாம். காமராஜா் கட்டிய அழியாப் புகழ் அணைகள் என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் 11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியா் பங்கேற்கலாம்.

தேனி மாவட்ட தொல்லியல் அதிசயங்கள் என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் பேச்சு போட்டியில் கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்கலாம். ஓவியப் போட்டிகளில் கலந்து கொள்பவா்கள் படம் வரைவதற்கான உபகரணங்களுடன் வரவேண்டும். பாா்க்காமல் படங்களை வரையவேண்டும்.

ADVERTISEMENT

போட்டிகளில் பங்கேற்க கம்பம் சோ. பஞ்சுராஜா, 8610418876 மற்றும் சி.பா. செந்தில்நாதன் 8124655655 என்ற செல்லிடப்பேசிகளில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT