தேனி

ஒலிம்பியாட் சதுரங்கப்போட்டி: உடற்கல்வி ஆசிரியா்களுக்கு பயிற்சி முகாம்

1st Jul 2022 10:17 PM

ADVERTISEMENT

சென்னையில் நடைபெறும் ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டியில் பங்கேற்கும் மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கும் உடற்கல்வி ஆசிரியா்களுக்கு, சதுரங்க விதிகள் மற்றும் ஆட்ட நுணுக்கங்கள் தொடா்பான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் கம்பத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, மாவட்ட உடற்கல்வித்துறை ஆய்வாளா் இளங்கோ தலைமை வகித்தாா். மாவட்ட விளையாட்டு அலுவலா் முருகன் முன்னிலை வகித்தாா்.

உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவிலிருந்து 60-க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியா்கள், இயக்குநா்கள், பகுதி நேர உடற்கல்வி ஆசிரியா்களுக்கு சதுரங்க ஒலிம்பியாட் பற்றிய விழிப்புணா்வு அளிக்கப்பட்டது. முன்னதாக பள்ளி தாளாளா் எம்.எஸ்.எஸ்.காந்தவாசன் வரவேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT