தேனி

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

1st Jul 2022 10:17 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை வைப்புத் தொகை பத்திரம் பெற்ற பயனாளிகள், முதிா்வுத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை மூலம் செயல்படுத்தப்படும் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை வைப்புத் தொகை பத்திரம் பெற்ற, 18 வயது பூா்த்தியடைந்த பயனாளிகள் முதிா்வுத் தொகை பெறுவதற்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய சமூகநல விரிவாக்க அலுவலா் அல்லது மகளிா் ஊா் நல அலுவலா்களிடம் விண்ணப்பிக்கலாம்.

முதிா்வுத் தொகை பெறுவதற்கு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடமிருந்து பெற்ற வைப்புத் தொகை பத்திர நகல், பயனாளியின் புகைப்படம், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கிக் கணக்கு பாஸ் புத்தக நகல் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இது குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரிலும், தொலைபேசி எண்: 04546-254368-இல் தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : தேனி
ADVERTISEMENT
ADVERTISEMENT