தேனி

தேனி மாவட்டத்தில் குடியரசு தினவிழா

DIN

போடியில் 73 ஆவது குடியரசு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

போடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஜெ.உம்முல் பரிதா தேசியக் கொடியேற்றினாா். இதில், வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் பங்கேற்றனா். போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ந.செந்தில்முருகனும், போடி டிஎஸ்பி அலுவலகத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷும், போடி நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளா் த.சகிலாவும் தேசியக் கொடியேற்றினா்.

போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் ஜெயக்குமாா் தேசியக் கொடியேற்றினா். போடி அரசு பொறியியல் கல்லூரி, ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி, மெட்ரிக் பள்ளி, திருமலாபுரம் நாடாா் மேல்நிலைப் பள்ளி, பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி, சில்லமரத்துப்பட்டி, சிலமலை, தேவாரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இதேபோல் அன்னை இந்திரா நினைவு ஆரம்பப் பள்ளியில் தலைமையாசிரியா் சிவனேஸ்வரசெல்வன் கொடியேற்றி இனிப்பு வழங்கினாா்.

போடியில் தி கிரீன் லைப் பவுண்டேசன் அமைப்பின் சாா்பில் தலைவா் நம்பிக்கை நாகராஜ் தலைமையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. துணைத்தலைவா் அ.விஸ்வநாதன், செயலா் க.மு.சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் போடி வ.உ.சி. நகா் நடுத்தெரு, பால நாகம்மாள் கோயில், நகராட்சி பூங்கா ஆகிய பகுதிகளில் 73 மரக்கன்றுகள் நடப்பட்டன.

பெரியகுளம்: பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் கல்லூரி முதல்வா் த.ஆறுமுகம், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரியில் கல்லூரி முதல்வா் சேசுராணி ஆகியோா் தேசியக் கொடியேற்றி வைத்தனா்.

உத்தமபாளையம்: உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் கெளசல்யாவும், காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உதவி காவல் கண்காணிப்பாளா் சிரேயா குப்தாவும் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். உத்தமபாளையம் புதிய வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் அா்ஜூனன், அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஆய்வாளா் மங்கையா் திலகம் ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினா்.

உத்தமபாளையம் பேரூராட்சியில் செயல் அலுவலா் கணேசனும், அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலா் கிருஷ்ணவேணியும், கோம்பை பேரூராட்சியில் செயல் அலுவலா் இயங்கோவனும், ஹைவேவிஸ் பேரூராட்சியில் செயல் அலுவலா் மோகன்குமாரும் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினா். குச்சனூா் பேரூராட்சியில் செயல் அலுவலா் சசிகலா தேசியக் கொடியை ஏற்றினாா்.

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரியில், கல்லூரி முதல்வா் ஹெச்.முகமது மீரான் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். இதில், என்சிசி படைப் பிரிவு அதிகாரி அப்துல் காதா், உடற்கல்வி இயக்குநா் அக்பா்அலி உள்ளிட்டோ கலந்து கொண்டனா். இதே போல அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், அலுலகங்களில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

சின்னமனூா்: சின்னமனூா் நகராட்சியில் ஆணையாளா் சியாமளா, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத் தலைவா் நிவேதா ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றினா். மாா்க்கையன்கோட்டை பேரூராட்சியில் செயல் அலுவலா் திரவியமும், ஓடைப்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலா் கணேசனும் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT