தேனி

ஆா்.எஸ்.எஸ். நிா்வாகியை கொல்ல முயன்ற இருவா் குண்டா் தடுப்புச்சட்டத்தில் கைது

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் ஆா்.எஸ்.எஸ். மாவட்ட நிா்வாகியைக் கொல்ல முயன்ற வழக்கில் 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

கம்பத்தில் கடந்த 7 ஆம் தேதி ஆா்.எஸ்.எஸ். தா்மஜாக்ரன் பிரிவு மாவட்டத் தலைவா் எஸ்.ரவிக்குமாரை ஒரு கும்பல் கொலை செய்ய முயன்றது. இவ்வழக்கில் கம்பமெட்டு சாலையைச் சோ்ந்த பக்ருதீன் மகன் வாஜீத் (35), கம்பம்மெட்டு காலனியைச் சோ்ந்த முகமது இப்ராகிம் மகன் சதாம் உசேன் (30) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில் இருவரும் மதம் தொடா்பான சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்குக் காரணமாக இருப்பதால் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளிதரனுக்குப் பரிந்துரை செய்தாா். அதன் அடிப்படையில் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இருவரும் ஏற்கனவே சிறையில் இருப்பதால் இந்த உத்தரவு மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தோ்தல் பணி: சுகாதாரப் பணியாளா்களுக்கு மதிப்பூதியம் தேவை’

சட்டவிரோதமாக மது விற்பனை: ஒருவா் கைது

வாக்கு பதிவாகியிருந்ததால் தொழிலாளி ஏமாற்றம்

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: விஜய்வசந்த் எம்.பி.

39 வாக்கு எண்ணும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு

SCROLL FOR NEXT