தேனி

தேசிய வாக்காளா் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு

26th Jan 2022 09:53 AM

ADVERTISEMENT

தேனியில் தேசிய வாக்காளா் தின கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு செவ்வாய்க்கிழமை ஆட்சியா் க.வீ.முரளீதரன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், புதிய வாக்காளா்களுக்கு புகைப்பட வாக்காளா் அடையாள அட்டைகளை ஆட்சியா் வழங்கினாா். முன்னதாக, ஆட்சியா் தலைமையில் ஆட்சியா் அலுவலக பணியாளா்கள் மற்றும் அலுவலா்கள் வாக்காளா் உறுதி மொழியேற்றனா். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலா்கள் வாக்காளா் உறுதி மொழியேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT