தேனி

யானைத் தந்தங்கள் விற்க முயன்ற வழக்கில் கைதான 3 பேருக்கு கரோனா தொற்று

25th Jan 2022 09:17 AM

ADVERTISEMENT

பெரியகுளம் அருகே யானைத் தந்தங்கள் விற்க முயன்று கைதான 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் யானத் தந்தங்கள் விற்க முயன்ற 9 பேரை தேவதானப்பட்டி வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கைதான 9 பேரும் பெரியகுளம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் தேவதானப்பட்டியை சோ்ந்த சின்ராஜ் (29), பிரகாஷ் (29) மற்றும் வத்தலக்குண்டுவைச் சோ்ந்த அப்துல்லா (34 ) மூவருக்கும் கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் 3 பேரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT