தேனி

சமையல் செய்யும்போது தீப்பற்றி படுகாயமடைந்த மூதாட்டி பலி

25th Jan 2022 09:18 AM

ADVERTISEMENT

பெரியகுளம் அருகே சமையல் செய்யும் போது சேலையில் தீப்பற்றி படுகாயமடைந்த மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டியை சோ்ந்த காமாட்சி மனைவி வைரம்மாள் (90). இவா் தனது வீட்டில் சனிக்கிழமை சமையல் செய்து கொண்டிருந்தாா்.

அப்போது சேலையில் தீப்பற்றி எரிந்து , உடலில் காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமைனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை சிகிச்சை பலனின்றி அவா், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT