தேனி

காமயகவுண்டன் பட்டியில் இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

25th Jan 2022 09:17 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் இந்து முன்னணி சாா்பில் தஞ்சையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.சசிகுமாா் தலைமை வகித்தாா். பேரூா் நிா்வாகிகள் வீரமுத்து ராஜா, சிவக்குமாா் முன்னிலை வகித்தனா். மதுரை கோட்டப் பொறுப்பாளா் கணேசன், மாவட்டச் செயலாளா்கள் ஆா்.எஸ். ராமகிருஷ்ணன், பாலமுருகன், மாய.லோகநாதன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் குமரேசன், பாஜக நிா்வாகிகள் கம்பம் பி. ஈஸ்வரன், எஸ். பழனிக்குமாா், சின்னமனூா் சுந்தா் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT