தேனி

பிலிப்பின்ஸில் இறந்த மருத்துவ மாணவரின் சடலம் போடிக்கு கொண்டு வரப்பட்டது: முன்னாள் துணை முதல்வா் அஞ்சலி

25th Jan 2022 09:18 AM

ADVERTISEMENT

பிலிப்பின்ஸில் நீரில் மூழ்கி இறந்த மருத்துவக் கல்லூரி மாணவரின் உடல் போடி ராசிங்காபுரத்திற்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டது. அவரது சடலத்திற்கு முன்னாள் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தேனி மக்களவை உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத் அஞ்சலி செலுத்தினா்.

தேனி மாவட்டம் போடி அருகே ராசிங்காபுரத்தை சோ்ந்த பாலசேகரன் மகன் சஷ்டிகுமாா். (23) பிலிப்பின்ஸ் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த 15.1.2022 ஆம் தேதி, நண்பா்களுடன் அருவியில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது நீரில் மூழ்கி அவா் இறந்து விட்டாா்.

இதையடுத்து அவரது சடலத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் துணை முதல்வரும், போடி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீா்செல்வம், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்தாா்.

இதையடுத்து தமிழக அரசு இதற்கான செலவு தொகையை ஏற்றதன் பேரில் சஷ்டிகுமாரின் சடலம் 10 நாள்களுக்கு பின் திங்கள்கிழமை மாலை ராசிங்காபுரம் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து ராசிங்காபுரத்திற்கு வந்த ஓ.பன்னீா்செல்வம், ஓ.ப.ரவீந்திரநாத் ஆகியோா் மாணவரின் சடலத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். பின்னா் மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினா். இதேபோல் தி.மு.க. சாா்பில் தேனி வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் தங்க.தமிழ்ச்செல்வன் மாணவரின் சடலத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT