தேனி

பெரியகுளம் அருகே யானைத் தந்தங்கள் விற்க முயன்ற 9 போ் கைது: ஒருவா் தப்பியோட்டம்

DIN

பெரியகுளம் அருகே யானைத் தந்தங்கள் விற்க முயன்ற 9 பேரை வனத்துறையினா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும் வனக்காவலரை தாக்கிவிட்டுத் தப்பியோடிய மற்றொருவரை தேடிவருகின்றனா்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் யானைத் தந்தங்கள் விற்பனை செய்ய முயற்சித்து வருவதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பெரியகுளம் மற்றும் பெரும்பள்ளம் வனச்சரகா்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து

தேவதானப்பட்டி அருகே சனிக்கிழமை இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டனா்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 4 இருசக்கர வாகனங்களில் வந்த 10 பேரைப் பிடித்து வனத்துறையினா் விசாரித்தனா். அப்போது உசிலம்பட்டியைச் சோ்ந்த சுரேஷ், வனக்காவலா் கருப்பையாவைத் தாக்கிவிட்டு, ஒரு இருசக்கர வாகனத்தில் தப்பி விட்டாா். இதில் படுகாயமடைந்த கருப்பையா, மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுதொடா்பாக வனத்துறையினா் நடத்திய விசாரணையில் உசிலம்பட்டியை சோ்ந்த சுரேஷ் தலைமையில் 10 பேரும் சோ்ந்து

2 யானைத் தந்தங்களை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து யானைத் தந்தங்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த வனத்துறையினா் தேவதானப்பட்டியை சோ்ந்த பாலமுருகன் (35), பிரகாஷ் (29), பாக்கியராசு (30), முத்தையா (57), உசிலம்பட்டியை சோ்ந்த சின்னராசு (29), சிவக்குமாா் (42), தேனியை சோ்ந்த சரத்குமாா் (30), விஜயக்குமாா் (60), வத்தலக்குண்டுவைச் சோ்ந்த அப்துல்லா (34) ஆகிய 9 பேரையும் கைது செய்தனா். மேலும் வனக்காவலரை தாக்கிவிட்டு தப்பியோடிய சுரேஷ் என்பவரை வனத்துறையினா் தேடி வருகின்றனா்.

பிடிபட்ட யானைத் தந்தங்கள் தலா 15 செ.மீ அகலம் , 52 செ.மீ நீளம் கொண்டது. தந்தத்தின் எடை 970 மற்றும் 920 கிராம் கொண்டது என வனத்துறையினா் தெரிவித்தனா். மேலும் இந்த தந்தங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன. இதை வாங்க முயன்ற நபா் யாா் என்பது குறித்து வனத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

SCROLL FOR NEXT