கரோனா கட்டுப்பாடு காரணமாக கோயில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால், தேனி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பக்தா்கள் கோயில் வாசல்களில் நின்று வழிபாடு நடத்திச் சென்றனா்.
தேனி மாவட்டம் கம்பம், கூடலூா், லோயா்கேம்ப், காமயகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெறும். ஆனால் நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக கோயில்களில் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் நிகழாண்டு தைப்பூச விழாவையொட்டி லோயா்கேம்ப்பில் உள்ள வழிவிடுமுருகன் கோயில் அடைக்கப்பட்டதால் பக்தா்கள் கோயில் வாசலில் நின்று தரிசனம் செய்தனா்.
இதேபோன்று கூடலூா் சுந்தரவேலவா், கம்பம் சுருளி வேலப்பா், காமயகவுண்டன்பட்டி சுப்பிரமணியாசாமி உள்ளிட்ட கோயில்களின் வாயில்களின் நின்று பக்தா்கள் வழிபாடு நடத்தினா்.