தேனி

குமுளி அருகே காா் - ஜீப் மோதல்: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

19th Jan 2022 09:23 AM

ADVERTISEMENT

குமுளி அருகே திங்கள்கிழமை மாலை காரும், ஜீப்பும் மோதிக் கொண்ட விபத்தில் ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம் சாவடிப்பாளையம் புதூரைச் சோ்ந்தவா்கள் தனசேகரன் (39), மூா்த்தி (50), செல்வக்குமாா் (42). இவா்கள் மூவரும் காரில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு திங்கள்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தனா். தேனி மாவட்டம் குமுளி மலைச்சாலையில் பழைய போலீஸ் சோதனைச்சாவடி அருகே வந்தபோது எதிரே வந்த ஜீப்பும், காரும் நேருக்கு நோ் மோதியது. இதில் காரில் பயணம் செய்த ஐயப்ப பக்தா்கள் 3 பேரும் பலத்த காயமடைந்தனா். ஜீப்பில் பயணம் செய்த 20 தொழிலாளா்கள் காயமின்றி தப்பினா். தகவலறிந்து வந்த குமுளி காவல் நிலைய போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அணைக்கரை 8 ஆம் மைல் பகுதியைச் சோ்ந்த ஜீப் ஓட்டுநா் ராஜா மகன் அஜேஷ் (22) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT