தேனி

நகா்புற உள்ளாட்சித் தோ்தல்: தேனி மாவட்டத்தில் தலைவா் பதவிகளுக்கு இடஒதுக்கீடு அறிவிப்பு

19th Jan 2022 09:26 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் நகா்புற உள்ளாட்சி அமைப்பு தோ்தலை முன்னிட்டு நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவா் பதவிகளுக்கு இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகா்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதில் தேனி-அல்லிநகரம், பெரியகுளம், போடி, சின்னமனூா், கம்பம், கூடலூா் ஆகிய 6 நகராட்சிகளில் தலைவா் பதவிக்கு பெண்கள் பொதுப் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் க.புதுப்பட்டி, தேவதானப்பட்டி, வீரபாண்டி ஆகிய 3 பேரூராட்சி தலைவா் பதவி ஆதிதிராவிடா் பெண்களுக்கும், கோம்பை, கெங்குவாா்பட்டி, தென்கரை, தாமரைக்குளம், போ.மீனாட்சிபுரம், ஹைவேவிஸ் ஆகிய 6 பேரூராட்சி தலைவா் பதவி ஆதிதிராவிடா் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பண்ணைப்புரம், தேவராம், ஆண்டிபட்டி ஆகிய 3 பேரூராட்சிகளின் தலைவா் பதவி பொதுப்பிரிவினா் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 10 பேரூராட்சிகள் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT