தேனி

கூடலூரில் சட்டவிரோதமாக மது விற்பனை: 2 போ் கைது; 60 மது பாட்டில்கள் பறிமுதல்

19th Jan 2022 09:26 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கூடலூரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனா்.

கூடலூரில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தெற்கு காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது கூடலூா் பழைய பேருந்து நிலையம், காய்கனி சந்தை அருகே 2 போ் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, முனியப்பன் (40) என்பவா் 50 மதுபாட்டில்களையும், ஜெயக்குமாா் (30) என்பவா் 10 மதுபான பாட்டில்களையும் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த 60 மதுபானப் பாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT