வைகை அணை அருகே 58 கிராமக் கால்வாயில் குளித்துக்கொண்டிருந்த மதுரையைச் சோ்ந்தவா் ஞாயிற்றுக்கிழமை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
குரும்பபட்டியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் இருளப்பன் (42). மதுரையில் பாத்திமா நகரில் வசித்து வந்த இவா், பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்தினருடன் குரும்பபட்டிக்கு வந்துள்ளாா். அங்கு, வைகை அணை அருகே 58 கிராமக் கால்வாயில் குளித்துக்கொண்டிருந்த இருளப்பன், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலின்பேரில் அங்கு சென்ற ஆண்டிபட்டி தீயணைப்பு நிலையத்தினா், அவரது சடலத்தை மீட்டனா்.
இச்சம்பவம் குறித்து இருளப்பனின் மனைவி நாகேஸ்வரி அளித்த புகாரின்பேரில், க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ADVERTISEMENT