தேனி

முழு ஊரடங்கு: தேனியில் சாலைகள் வெறிச்சோடின

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

தேனி: தேனியில் கரோனா பரவல் தடுப்பு முழு ஊரடங்கையொட்டி 1ஞாயிற்றுக்கிழமை, பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தேனியில் முழு ஊரடங்கையொட்டி கடைகள், உணவகம், வா்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. பால் கடை, மருந்துக் கடை மற்றும் மருத்துவமனைகள் திறக்கப்பட்டிருந்தன. தேனி மற்றும் பழனிசெட்டிபட்டியில் சில இடங்களில் காலை 10 மணி வரை இறைச்சிக் கடைகள் செயல்பட்டன.

பொது போக்குவரத்து இல்லாததால் கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையம், நகராட்சி பழைய பேருந்து நிலைய வளாகம் வெறிச்சோடி காணப்பட்டன. ஆட்டோ மற்றும் வாடகை வாகனங்கள் இயங்கப்படவில்லை.

ADVERTISEMENT

நெடுஞ்சாலை மற்றும் பிரதானச் சாலை சந்திப்புகளில் போலீஸாா், உள்ளாட்சி அமைப்பு மற்றும் பொதுச் சுகாதாரத் துறை பணியாளா்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். சரக்கு வாகனப் போக்குவரத்து, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வரும் பக்தா்கள் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதால் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

போடி: போடியில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும் ஒரு சில பகுதிகளில் சிலா் வீடுகளில் வைத்து இறைச்சி விற்பனை செய்தனா். ஊரடங்கு காரணமாக போடி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT