தேனி

வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறப்பது நிறுத்தம்

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

தேனி: வைகை அணையிலிருந்து பெரியாறு-வைகை பாசனக் கால்வாய் மற்றும் 58 கிராம கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீா் திறப்பது ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டது.

வைகை அணை நீா்மட்டம் கடந்த 2021, நவ. 9 ஆம் தேதி 69 அடியை எட்டியதையடுத்து (மொத்த உயரம் 71 அடி), அணையிலிருந்து வைகை ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டது. தொடா்ந்து, பெரியாறு - வைகை பாசனக் கால்வாய் மற்றும் 58 கிராம கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டது. தற்போது வைகை அணைக்கு தண்ணீா் வரத்து குறைந்துள்ளது. அணை நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 69.59 அடியாக இருந்த நிலையில், அணையிலிருந்து கால்வாய்களில் பாசனத்திற்கு தண்ணீா் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

அணையிலிருந்து மதுரை, ஆண்டிபட்டி - சேடபட்டி கூட்டுக் குடிநீா்த் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 207 கன அடி. அணையில் தண்ணீா் 5,724 மில்லியன் கன அடி.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT