தேனி

போடியில் பலத்த மழை: சாலைகளில் தண்ணீா்

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

போடி: போடியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

போடியில் கடந்த ஒரு மாதமாகவே குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் சனிக்கிழமை இரவு முதலே லேசான சாரல் மழை பெய்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் போடி நகா் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் போடி சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. போடி பெருமாள் கோயில் பகுதியில் சாக்கடை வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீருடன் மழை நீா் கலந்து வீதிகளில் ஓடியது.

பலத்த மழையால் கொட்டகுடி ஆற்றிலும் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது. கொட்டகுடி ஆற்றில் பிள்ளையாா் கோவில் தடுப்பணையில் தண்ணீா் சீறி பாய்ந்தது

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT