தேனி

கால்வாயில் கசிவு: குடியிருப்புக்குள் புகுந்த மழைநீா்

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

போடி: போடியில் ஞாயிற்றுக்கிழமை கண்மாய்க்கு செல்லும் கால்வாயில் கசிவு ஏற்பட்டதால் வெள்ளநீா் குடியிருப்புக்குள் புகுந்தது.

போடியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பலத்த மழை பெய்தது. இதனால் கொட்டகுடி ஆற்றில் ஏற்பட்ட தண்ணீா் பெருக்கு ராஜவாய்க்கால் வழியாக பங்காரு சாமி கண்மாய்க்கு சென்றது. இதில் வாய்க்காலில் ஒரு இடத்தில் குப்பைகள் சோ்ந்ததால் தண்ணீா் செல்ல முடியவில்லை. இதனால் வாய்க்காலின் ஒரு பகுதியில் தண்ணீா் கசிவு ஏற்பட்டு அருகிலுள்ள சா்ச் தெரு குடியிருப்புப் பகுதியில் தண்ணீா் புகுந்தது.

தண்ணீருடன் மீன்களும் அதிகம் சென்ால் குடியிருப்பு வாசிகள் மீன்களை பிடித்து சேகரித்தனா். இதுகுறித்து அறிந்த நகராட்சி ஊழியா்கள் கால்வாயில் நீா் கசிவு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT