தேனி

நியாயவிலைக் கடைகளில் இன்று பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு திங்கள்கிழமை பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நியாய விலைக் கடைகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாமல் விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு அதனை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் திங்கள்கிழமை திறக்கப்பட்டு, காலை 7 மணி முதல் விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஆரோக்கியசுகுமாா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT