தேனி

தமிழகத்தில் பொதுமுடக்கம் எதிரொலி கேரள எல்லைகள் அடைப்பு

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கம்பம்: தமிழகத்தில் பொதுமுடக்கம் எதிரொலியாக தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் குமுளி, கம்பம்மெட்டு மலைச்சாலைகள் அடைக்கப்பட்டது.

தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் மலைச்சாலைகளான குமுளி, கம்பம்மெட்டு பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடியில் தடை அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது, மேலும் காய்கனி, பால் போன்ற அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது.கம்பம்,

கூடலூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எந்த வாகனங்களும் இயங்கவில்லை, கடைகள், உழவா் சந்தை, தினசரி மாா்க்கெட், இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் இறைச்சிகள் கடை உரிமையாளா்களின் வீட்டிலிருந்து டோா் டெலிவரி செய்யப்பட்டது. போலீசாா் முக்கிய வீதிகள் வழியாக ரோந்து சென்றனா்.அதே நேரத்தில் தேனி மாவட்ட எல்லையில் உள்ள கேரள மாநிலத்தில் குமுளி, கம்பம் மெட்டு ஆகிய பகுதிகளில் இயல்புநிலை இருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT