தேனி

முழுபொதுமுடக்கு: போடியில் வெறிச்சோடிய சாலைகள்

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

போடி: போடியில் ஞாயிரன்று முழு பொதுமுடக்கை முன்னிட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இறைச்சி கடைகள் மறைமுகமாக இயங்கியது தமிழகத்தில் ஓமைக்ரான் தீநுண்மி பரவுவதை தடுக்க ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து போடியில் அனைத்து கடைகள், வா்த்தக நிறுவனங்கள், தனியாா் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. பேருந்துகள் இயங்கவில்லை. ஆட்டோ, வாடகை காா் உள்ளிட்டவை இயங்கவில்லை. மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள் மட்டும் செயல்பட்டன. சில தனியாா் உணவகங்களில் பாா்சல் உணவு மட்டும் வழங்கப்பட்டது.

இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தாலும் சிலா் வீடுகளில் வைத்து இறைச்சி விற்பனை செய்தனா். கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. போடி நகா், தாலுகா காவல் நிலைய போலீஸாா் தற்காலிக சோதனை சாவடி அமைத்து கண்காணித்து வந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT