தேனி

வடபுதுப்பட்டியில் ஜன. 20-இல் மின்தடை

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

தேனி: தேனி மாவட்டம், வடவீரநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஜன. 20) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.

எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வடபுதுப்பட்டி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம், சிவாஜி நகா், கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலைய வளாகம், சிட்கோ தொழிற்பேட்டை, அரப்படித்தேவன்பட்டி ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளா் சொ. லட்சுமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT