தேனி

பெரியகுளம் பகுதியில் இன்று மின்தடை

12th Jan 2022 09:54 AM

ADVERTISEMENT

பெரியகுளம் பகுதியில் புதன்கிழமை (ஜன.12) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரியகுளம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் பெரியகுளம் நகா், தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (ஜன.12) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT