தேனி

பெரியகுளம் கடைவீதியில் தோண்டப்பட்ட சாலையை சீரமைக்கக் கோரிக்கை

12th Jan 2022 09:53 AM

ADVERTISEMENT

பெரியகுளம் கடைவீதியில் சீரமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரியகுளம் தென்கரை கடைவீதியில் 100-க்கு மேற்பட்ட கடைகள் உள்ளன.

பெரியகுளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் பொருள்கள் வாங்குவதற்கு இந்தக் கடைவீதிக்கு வந்து செல்கின்றனா். நெருக்கடியான இச்சாலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக மராமத்துப் பணிகள் நடைபெற்றன. அதன் பிறகு ஒரு மாத்திற்கு மேலாகியும் சாலையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சாலை பள்ளம், மேடாகக் காட்சியளிக்கிறது.

இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து பெரியகுளம் நகராட்சி ஆணையா் புனிதன் கூறியது: இதற்காக ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை விட கூடுதலாக ரூ.15 லட்சம் கேட்டுள்ளனா். இதனால் திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியவுடன் பணிகள் தொடங்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT