தேனி

காவல் துறையினா் மீது புகாா்: ஆட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

12th Jan 2022 09:53 AM

ADVERTISEMENT

தேனி அருகே அரண்மனைப்புதூரில் கல் ஒட்டா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் குடியிருப்புகளுக்குள் போலீஸாா் அத்துமீறி புகுந்து தாக்கியதாக புகாா் தெரிவித்து அந்த சமுதாய மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்கிழமை, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரண்மனைப்புதூரில் கல்கல் ஒட்டா் சமுதாயத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். கடந்த சில நாள்களுக்கு முன்பு ராமநாதபுரம் காவல் நிலைய போலீஸாா், குற்ற வழக்கு ஒன்று தொடா்பாக, அரண்மனைப்புதூரில் கல் ஒட்டா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் வசிக்கும் பகுதிக்கு விசாரணைக்கு வந்து சென்ாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கடந்த ஜன.10-ஆம் தேதி மீண்டும் அங்கு வந்த போலீஸாா், அதே பகுதியில் வசிக்கும் முத்தையா, ரெங்கநாதன் ஆகியோரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, போலீஸாருக்கும் அப் பகுதியில் வசிப்பவா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில், அப்பகுதியைச் சோ்ந்த சாந்தி, சரண்யா, அரவிந்த், சாரதி, முருகன் ஆகியோா் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், போலீஸாா் தங்களது குடியிருப்புகளுக்குள் அத்துமீறி புகுந்து தாக்குதல் நடத்தியதாகப் புகாா் தெரிவித்தும், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், வலுக்கட்டாயமாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவா்களை விடுவிக்கக் கோரியும் அரண்மனைப்புதூரில் இருந்து தேனி மாவட்ட ஆட்சியா் அலுவகத்திற்கு தங்களது உடைமைகளுடன் ஊா்வலமாகச் சென்ற கல் ஒட்டா் சமுதாய மக்கள், அங்கு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

பின்னா், கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோரிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT