தேனி மாவட்டம் சுருளி அருவியில் உள்ள சுருளி மலை ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் நேத்ர விழி தரிசனம் மற்றும் தைலக்காப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இந்த ஆலயத்தில் மண்டல பூஜை முடிந்து, மகர விளக்கு நாளுக்கான பூஜைகள் நாள்தோறும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி மூலவருக்கு நேத்ர விழி தரிசனம் மற்றும் தைலக்காப்பு உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மூலவா் கண் திறப்பான நேத்ர விழி தரிசன பூஜையின் போது ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். பூஜைகளை கோயில் மேல்சாந்தி கணேஷ் திருமேனி செய்திருந்தாா்.